நீலக்கல் எந்த விரலில் அணிய வேண்டும் | நீலக்கல் யார் அணியலாம் | Blue sapphire stone

Опубликовано: 05 Январь 2025
на канале: Ram karthick
1,035
32

நீல கல் யார் அணிய வேண்டும்
நீல கல் மோதிரம் எந்த விரலில் அணிய வேண்டும்
நீல கல் மோதிரம் யார் அணியலாம்
நீல கல் மோதிரம் அணியும் முறை
நீல கல் யார் அணியலாம்
நீல கல் மோதிரம்
நீல கல் யார் அணிய கூடாது
நீல கல் மோதிரம் எந்த விரலில் அணிவது
நீல கல் எந்த ராசிக்காரர்கள் அணியலாம்
நீலக்கல் எந்த ராசிக்காரர்கள் அணிய கூடாது,
blue sapphire gemstone,
நீல கல் யார் அணிந்தால் ஆபத்து
நீல கல் மோதிரம் பயன்கள்
நீல கல் வெள்ளி மோதிரம்
நீல கல் யார் அணியலாம்
நீல கல்
நீல கல்லை எந்த ராசிகாரர்கள் அணியலாம்
Blue sapphire
blue sapphire benefits
benefits of blue sapphire gemstone
#bluesapphire
#gemstones
#benefits
#rasikal
blue sapphire gemstone benefits
blue stone benefits tamil
blue stone benefits
rasi kal
#rasikal

நவரத்தினங்களில் ஒன்றான நீலக்கல் மிக வலிமையானதும் வேகமாக செயல்படக் கூடியதும் ஆகும். நீலநிற கல் அல்லது நீலக்கல் என்று அழைக்கப்படும். இந்த கல் அதிக சக்தி வாய்ந்தது. நீலக்கல் பார்ப்பதற்கு ஆடம்பரமாகவும் உயர்தரமானதாகவும் இருக்கும். வண்ணமயமான இந்த நீலநிற கல் விலைமதிப்பற்ற ரத்தினங்களில் ஒன்று. மேலும் இது கடவுள் கர்மாவின் ஆற்றலையும் சனிபகவானின் ஆற்றலையும் கொண்டுள்ளது. எனவே இந்த கல்லை அணிபவர்களின் வாழ்க்கையானது துன்பங்கள் மறைந்தும் செல்வ செழிப்பாகவும் இருக்கும்.



வைரத்திற்குப் பிறகு நீலக்கல் தான் திடமான கல் ஆகும். நீலநிற கல் ரொம்ப இருண்ட மாதிரியும் இல்லாமல் வெளுப்பாகவும் இல்லாமல் இரண்டினுடைய சாயலிலேயும் மெருகேறி இருக்கும். ஜோதிட ரீதியில் நீலக்கல் அணிவதன் பலன்கள் நீலநிற ராசிக் கல் அணிபவர்கள் பண வகையில் முன்னேற்றமும், அவர்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வுகள் கிடைப்பதையும் சிக்கல்களிலிருந்து விடுபடுவதையும் நன்றாக உணரலாம். அதுமட்டுமில்லாமல் இந்த கல் பொது வாழ்க்கையிலும் தொழில்ரீதியாகவும் குடும்ப வாழ்க்கையிலும் அற்புதமான பலன்களை வழங்கும்.

நீலநிற ராசிக் கல் அணிந்தால் பணம் கொட்டும், அதிஷ்டம் அடிக்கும், செழிப்பான வாழ்க்கையைக் கொடுக்கும். மேலும் பணப் பற்றாக்குறையைப் போக்கி, பழைய பிரச்சனைகளுக்குத் தீர்வைக் கொடுக்கும். நீலக்கல் அணிபவர்களின் மனம் நிம்மதியாகவும் அமைதியாகவும் இருக்கும் அதனால் அவர்கள் சரியான முடிவுகளை எடுக்க முடியும். அதோடு அவர்களுக்குத் தெளிவான சிந்தனைகள் இருக்கும் அதனால் எந்தவித குழப்பங்களும் சந்தேகங்களும் மனதில் இருக்காது. இந்த கல் அணிபவர்கள் மிகுந்த கவனத்தோடும் உறுதியோடும் இருக்க முடியும். அதோடு இந்த கல் தேவையற்ற எதிர்மறை சிந்தனைகளையும் கவலைகளையும் அதனால் ஏற்படும் மன அழுத்தங்களையும் தடுக்கும். மேலும் அவர்கள் தன்னம்பிக்கையும் மனம் சமநிலையை அடைவதையும் உணர முடியும்.



ராசியினர் எந்த ராசிக்கல் அணியலாம்?: ஜோதிடர்களின் விளக்கம்

நீலக்கல் உடல்நலத்திலும் பல பலன்களை அணிபவர்களுக்கு அளிக்கிறது. இந்த கல் வயிறு பிரச்சனைகளுக்குத் தீர்வையும் செரிமானம் முறையாக நடைபெறவும் உதவுகிறது. மேலும் இது மன அழுத்தம், பதட்டம், சோர்வு போன்ற பிரச்சனைகளிலிருந்து வெளிவர உதவுகிறது. மேலும் நரம்பு தொடர்பான கோளாறுகளைக் கையாள்வதற்கும் உதவுகிறது. மூச்சுக்குழாய் அழற்சி, பக்கவாதம், கீழ்வாதம், முடக்கு போன்ற நோய்களிலிருந்தும் மீண்டு ஆரோக்கியமாக வாழ இந்த கல் உதவுகிறது. மேலும் அந்தரங்க உறுப்புகள், எலும்புகள், பற்கள், முழங்கால், பாதம், விலா போன்ற உறுப்புகளின் பிரச்சனைகளுக்கும் நல்ல பலன்களைக் கொடுக்கிறது. சனிபகவான் ஒரு நபரின் செல்வத்தை நேரடியாக பாதிக்க முடியும் என்பதால் இதை அணிபவர் அவரைச் சமாதானப்படுத்த முடியும். மேலும் பெயர், புகழ், அதிர்ஷ்டம் மற்றும் பணம் ஆகியவற்றை சம்பாதிக்க முடியும்.

மேற்கண்ட ஜோதிட நன்மைகளை அனுபவிப்பதற்கு, பொருத்தமான நீலக்கல்லை அணிந்திருக்க வேண்டும் என்பது மிகவும் முக்கியம், ஏனெனில் இது நிபுணர்களின் பரிந்துரைகளுக்குப் பிறகும் 40-50% மக்களுக்கு மட்டுமே பொருத்தமானது. எனவே, நீலக்கல் ஜோதிட நிபுணர்களால் எச்சரிக்கையுடன் பரிந்துரைக்கப்படுகிறது, ஏனெனில் இது வேத ஜோதிடத்தின் படி ஒரு கர்ம கிரகமான சனியின் ஆற்றலைக் கொண்டுள்ளது.

சனி ஒருவருக்கு அதிகப்படியாக கொடுக்கவும் செய்யும் பாதிக்கவும் செய்யும் அதனால் நீலக்கல் அணியும் போது கவனம் தேவை. சரியான நேரத்தில் அணியவேண்டும் அதுவுமில்லாமல் 100% இயற்கையானது என சான்றளிக்கப்பட்டதா என பார்த்து அணியவேண்டும்.

அணிபவர் குறைந்தபட்சம் 2 காரட் எடையுடன் உள்ள நீலக்கல்லை(நீலம் ராசிக் கல்) அணிய வேண்டும். நீலக்கல்லை வெள்ளி மோதிரத்திலோ அல்லது பிளாட்டினம் மோதிரத்திலோ அல்லது அதன் செயினிலோ சேர்த்து அணிந்தால் மட்டுமே நேர்மறையான முடிவுகளைத் தரும். தங்க மோதிரம் மற்றும் சங்கிலியோடு அணியக்கூடாது, அப்படி அணிந்தால் எதிர்மறையான முடிவுகளையே தரும்.